கோவை - ஷீரடி விமான சேவைக்கு வரவேற்பு!

கோவை விமான நிலையத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஷீரடிக்கான விமான சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நேரடி விமான சேவைகள் குறித்து பலருக்கு தெரியாததால் பெங்களூரு வழியாக பயணிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Nov 14, 2024 - 17:10
 0  3
கோவை - ஷீரடி விமான சேவைக்கு வரவேற்பு!

கோவை: கோவை விமான நிலையத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ஷீரடிக்கான விமான சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நேரடி விமான சேவைகள் குறித்து பலருக்கு தெரியாததால் பெங்களூரு வழியாக பயணிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூருக்கு ஸ்கூட் நிறுவனம் சார்பில் தினமும் ஒரு விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், இண்டிகோ நிறுவனம் சார்பில் புதிதாக ஒரு சேவை சிங்கப்பூருக்கு சமீபத்தில் தொடங்கப்பட்டது. கோவையில் இருந்து தினமும் இரண்டு விமானங்கள் இயக்கப்படுவது குறித்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் பலருக்கு விழிப்புணர்வு இல்லாததால் பலர் வேறு நகரங்களுக்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow