சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு முதல் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வரை: சேதி தெரியுமா? @ ஏப்ரல் 1-7
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 மத்திய அரசு உயர்த்தியது.

ஏப்.1: உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்துக்குக் கண்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.
ஏப்.1: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியா ஹாக்கிப் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். இந்தியாவுக்காக 320 ஹாக்கிப் போட்டிகளில் பங்கேற்று 158 கோல்களை வந்தனா அடித்துள்ளார்.
What's Your Reaction?