சபரிமலைக்கு குடும்பத்தினருடன் வரும் பெண்களுக்காக பம்பையில் ஏசி இளைப்பாறுதல் மையம்! 

சபரிமலைக்கு குடும்ப உறுப்பினர்களுடன் வரும் பெண்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் பம்பையில் இளைப்பாறுதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 50 பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Dec 9, 2024 - 19:35
 0  3
சபரிமலைக்கு குடும்பத்தினருடன் வரும் பெண்களுக்காக பம்பையில் ஏசி இளைப்பாறுதல் மையம்! 

குமுளி: சபரிமலைக்கு குடும்ப உறுப்பினர்களுடன் வரும் பெண்கள் தங்கவும், ஓய்வெடுக்கவும் பம்பையில் இளைப்பாறுதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 50 பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கு உட்பட்ட பெண்களே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தரிசனத்துக்குச் செல்ல அனுமதி கிடையாது. இருப்பினும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மிக பயணமாக வரும் பெண்கள் பம்பை வரை வரலாம். தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்து திரும்பும் வரை இவர்கள் பம்பையில் உள்ள தங்கள் கார்களிலோ, நிழற்கூரைகளிலோ காத்திருப்பர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow