சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவ கேரள அரசின் ‘சுவாமி சாட்போட்’ செயலி: 24 மணி நேரமும் உதவிகள் பெற முடியும்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், கேரள அரசு ‘சுவாமி சாட்போட்’ என்ற பயண வழிகாட்டி செயலியை உருவாக்கியுள்ளது.

சென்னை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், கேரள அரசு ‘சுவாமி சாட்போட்’ என்ற பயண வழிகாட்டி செயலியை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு, சபரிமலைக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு இன்றி சிரமப்பட்டதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி, தமிழக தலைமைச் செயலர் பேசியதன் அடிப்படையில், தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள தலைமைச் செயலர் உறுதியளித்தார்.
What's Your Reaction?