சட்டவிரோதமாக குடியேறிய 19 ஆயிரம் பேர் பிரிட்டனில் இருந்து வெளியேற்றம்
பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய இந்திய ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் அதிரடி சோதனையை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய இந்திய ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் அதிரடி சோதனையை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் பேரை பிரிட்டன் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணியை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. அதுபோன்ற பணியை தற்போது பிரிட்டன் அரசும் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டறியும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் கடந்த வாரம் முதல் ஈடுபட்டு உள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களை கைது செய்து அவர்களது சொந்த நாட்டுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்து வருகின்றனர்.
What's Your Reaction?