கோவை - மேட்டுப்பாளையத்தில் செண்டு மல்லி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்

மேட்டுப்பாளையத்தில் தேவை அதிகரிப்பால், செண்டு மல்லி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Mar 1, 2025 - 23:10
 0  5
கோவை - மேட்டுப்பாளையத்தில் செண்டு மல்லி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் தேவை அதிகரிப்பால், செண்டு மல்லி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள வெள்ளியங்காடு, தாயனூர், தேரம்பாளையம், சம்பரவள்ளி, தோலம்பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சம்பங்கி, மல்லிகை, செண்டு மல்லி, கோழிக்கொண்டை போன்ற பூக்கள், பல நூறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு சாகுபடி செய்யப்படும் மலர்களை பறித்து மார்க்கெட்டுகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதில், முக்கிய சாகுபடியாக செண்டு மல்லி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow