மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்: மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘நாட்டிலேயே அதிக நகரமயமாதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களை சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. குறிப்பாக, சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
What's Your Reaction?