கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். 

Apr 13, 2025 - 13:50
 0  3
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு 

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 4-ம் திருநாளான கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு குடவரை வாசல் தரிசனம் நடந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow