கூடுகள் பலவிதம் | பறப்பதுவே 16
பறவைகளுக்கு உணவுக்கு அடுத்தபடியாக இருப்பிடம் அவசியமானது. ஆனால், எல்லாப் பறவைகளும் கூடுகட்டுவதில்லை. அப்படி என்றால் கூடு எதற்கு? அடுத்த சந்ததியை உருவாக்குவதற்குப் பறவைகளுக்குக் கூடுகள் தேவைப்படுகின்றன.

பறவைகளுக்கு உணவுக்கு அடுத்தபடியாக இருப்பிடம் அவசியமானது. ஆனால், எல்லாப் பறவைகளும் கூடுகட்டுவதில்லை. அப்படி என்றால் கூடு எதற்கு? அடுத்த சந்ததியை உருவாக்குவதற்குப் பறவைகளுக்குக் கூடுகள் தேவைப்படுகின்றன. முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, வளரும் வரை பாதுகாக்கத் தேவையான இடமாகக் கூடுகள் இருக்கின்றன.
அதிக வெப்பம், அதிகக் குளிர் இருக்கும் புறச்சூழ்நிலையில் இருந்து காத்துக்கொள்ளச் சில பறவைகள் கூடுகளைக் கட்டுகின்றன. முட்டையை அடைகாக்க, குறிப்பிட்ட வெப்பநிலையில் முட்டைகளை வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதுக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கக் கூடு அவசியம்.
What's Your Reaction?