குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது

Oct 1, 2025 - 17:30
 0  3
குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவியத் தொடங்கினர். இத்திருவிழா செப்டம்பர் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். 8-ம் நாளான நேற்று இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். 9-ம் நாளான இன்று (அக்.1) அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow