குமரி: வெயிலிலும் 110 கி.மீ. தூரம் ஓடியே சென்று சிவாலயங்களை தரிசிக்கும் பக்தர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய சிறப்புமிக்க பன்னிரு சிவாலய ஓட்டம் இன்று (பிப்.25) துவங்கியது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் 110 கிலோ மீட்டர் தூரம் ஓடியே சென்று பக்தர்கள் சிவாலயங்களை தரிசித்தனர்.

Feb 25, 2025 - 20:20
 0  4
குமரி: வெயிலிலும் 110 கி.மீ. தூரம் ஓடியே சென்று சிவாலயங்களை தரிசிக்கும் பக்தர்கள்!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய சிறப்புமிக்க பன்னிரு சிவாலய ஓட்டம் இன்று (பிப்.25) துவங்கியது. சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் 110 கிலோ மீட்டர் தூரம் ஓடியே சென்று பக்தர்கள் சிவாலயங்களை தரிசித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த பன்னிரு சிவதலங்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 12 சிவாலயங்களையும் ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் என்ற நிகழ்ச்சி திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இருந்தே பாம்பரியமாக இங்கு நடைபெற்று வருகிறது. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு நிகழ்ச்சியாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow