‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ரேஸுக்கு செல்கிறார் அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கும் ’விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகிறார்.

Nov 24, 2024 - 04:30
 0  3
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ரேஸுக்கு செல்கிறார் அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கும் ’விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகிறார். இதில் 'விடாமுயற்சி’ படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது. இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதற்கிடையே ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. அங்கு இன்றுடன் (நவ.24) படப்பிடிப்பு முடிவடைகிறது. இதையடுத்து அங்கிருந்து தனது ரேஸிங் டீமுடன் ஸ்பெயின் செல்கிறார் அஜித்குமார். அங்குள்ள கார் ரேஸ் டிராக்கில் வரும் 27-ம் தேதி முதல் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார். இத்தகவலை, அஜித்குமாரின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow