காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வர வேண்டும்: துருக்கி

காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வர வேண்டும் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Feb 13, 2025 - 19:35
 0  4
காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வர வேண்டும்: துருக்கி

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் முன்வர வேண்டும் என்று துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தானுக்கு வருகை தந்த எர்டோகனை, நூர் கான் விமானப்படை தளத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-பும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் வரவேற்றனர். துருக்கி அதிபருடன் அவரது மனைவி எமின் எர்டோகன், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் வந்துள்ளனர். பிரதமர் மாளிகையில் எர்டோகனுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதியை வெளிப்படுத்தும் அறிக்கைகளை அவர்கள் இணைந்து வெளியிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow