கால் தட்டும் கங்காருகள் | உயிரினங்களின் மொழி - 7
கங்காருகளின் தலை அசைவுகளும் முக்கியமான தகவல்களைத் தெரிவிக்கின்றன. மெதுவாகத் தலையை அசைத்தால் , ’ஓ அப்படியா! நீ சொல்வது எனக்குப் புரிந்தது’ என்றிருக்கலாம். அல்லது, ’நீ சொல்வது சரிதான்’ என்று அங்கீகரிப்பதாக இருக்கலாம். அதுவே வேகமாக, செங்குத்தாக அசைத்தால் அது எச்சரிக்கையாக இருக்கும். ஆண் கங்காருகள் வட்ட வடிவில் தலையை அசைத்தால், ’நான்தான் தலைவர்’ என்று ஆதிக்கம் காட்டுவதாக இருக்கும்.

மற்ற விலங்குகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும் கங்காருகள், ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் வாழ்கின்றன. கங்காருகளில் பல வகை உண்டு. இவை மார்சுபியல் எனும் வயிற்றில் பையுடைய பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இவை ஒலி, உடல் அசைவு, வாசனை மூலம் தகவல் தொடர்புகளை மேற்கொள்கின்றன.
கங்காருகள் 6-12 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைமைப் பெண் கங்காரு இருக்கும். குழுவில் பல அடுக்குத் தொடர்பு அமைப்பு உண்டு. எல்லைகளைக் குறிக்க மரங்களில் அடையாளமிடுதல், மண் குழிகள் தோண்டுதல் போன்ற செயல்களைச் செய்கின்றன. தினமும் எல்லைப் பகுதிகளைச் சுற்றி வருகின்றன.
2019ஆம் ஆண்டு மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 150 கங்காருகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்தார்கள். 2 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் தகவல் தொடர்பு மொழியை ஆவணப்படுத்தி உள்ளார்கள்.
What's Your Reaction?