காலம் மறந்த அறிவியலாளர் எல்லப்பிரகதா சுப்பாராவ் - அத்தியாயம் 3

ஓய்வு ஒழிச்சல் இல்லா கர்ம வீரராக, சாதனைக்குப் பின் சாதனையென நிகழ்த்தும் தனித்தன்மையால் சக அறிஞர்களைச் சுப்பாராவ் கவர்ந்தார்.

Mar 7, 2025 - 16:45
 0  5
காலம் மறந்த அறிவியலாளர் எல்லப்பிரகதா சுப்பாராவ் - அத்தியாயம் 3

ஃபோலிக் அமிலமும் புற்றுநோய் மருந்தும்: 1943ஆம் ஆண்டு லெடெர்லியில் சுப்பாராவ் தலைமையில், விட்டமின் பி வகையில் ஒன்றான ஃபோலிக் அமிலம், கல்லீரல் திசுக்களில் இருந்து முதன்முறையாகப் படிகமாக்கப்பட்டு, அதன் மூலக்கூறு வடிவம் நிர்ணயிக்கப்பட்டது. கணிதத்தில் அசாத்தியத் திறமை கொண்டிருந்ததுபோல் கரிம வேதியியலில் திறமை கொண்டிருந்த சுப்பாராவ், ஃபோலிக் அமிலத்தின் மூலக்கூறு வடிவம் கண்டறியப்பட்ட நிலையில், அதனைச் செயற்கையாக உருவாக்கி [organic synthesis], உற்பத்தியைப் பெருக்கும் முறையை வடிவமைத்தார். இதன் மூலம் ஃபோலிக் அமில உற்பத்தி பெருகி பரவலாகக் கிடைக்கப்பட்டு, நோய்கள் குணப்படுத்தப்பட்டன.

அதே நேரத்தில் ஃபோலிக் அமிலம் சில வகை புற்றுநோய்களைத் தீவிரமாக்குவதும் கண்டறியப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு சுப்பாராவ் ஃபோலிக் அமிலத்தின் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்து, அதனைப் புற்றுநோய் எதிர்ப்பொருளாக மாற்றியமைத்தார். அமினோப்டெரின் [Aminopterin (Methotrexate)] எனும் இந்தச் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட எதிர்பொருள் ரத்தப்புற்றுநோய் சிகிச்சையில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow