லோகா: ஓர் அட்டகாச இந்திய யுனிவர்ஸ்

கருத்துரீதியாகவும் லோகா பல உயரங்களைத் தாண்டியிருக்கிறது. உறுப்புக் கடத்தல் மாஃபியாவுக்கு எதிராகவே சந்திரா சமர் புரிகிறார். அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பெண் சூப்பர்ஹீரோவாக வந்திருக்கிறார்.

Nov 4, 2025 - 10:35
 0  3
லோகா: ஓர் அட்டகாச இந்திய யுனிவர்ஸ்

பொதுவாகவே காமிக்ஸ், சூப்பர்ஹீரோக்கள் எனும் அதிநாயகர்களை எதற்காக உருவாக்குகிறோம், பார்க்கிறோம்? சிந்திக்கும் திறனும் கற்பனைத் திறனும் கொண்ட மனிதர்கள் காலம் முழுக்க புதிதுபுதிதாகத் தங்கள் கற்பனைக்கு வடிவம் கொடுத்தபடியே இருக்கிறார்கள். எவ்வளவுதான் படைப்பூக்கத்துடன் நாம் செயல்பட்டாலும் ஏமாற்றம், விரக்தி, இயலாமை, நெருக்கடிகள் போன்றவை மனிதர்களுக்கு வந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் சலித்துக்கொண்டு ஓய்ந்துபோயிருந்தால், மனித குலம் என்றைக்கோ அழிந்துபோயிருக்கும்.

மனித குலத்தின் ஒரு பகுதி, ஒரு சிலர் எப்போதுமே தவறாக, சுயநலமாக, பேராசையாக, வஞ்சனையாக செயல்பட்டாலும், மனிதகுலம் திரும்பத்திரும்ப தன் உள்ளார்ந்த தன்மையை, மனிதத்தன்மையை, மாந்த உணர்வை திரும்பத்திரும்ப ஏதோ ஒரு வகையில் நினைவுபடுத்திக்கொண்டே, உயிர்ப்பித்துக்கொண்டே வந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow