காணொளித் தம்பதியின் கதறல்! - இயக்குநரின் குரல்

கோலிவுட்டின் தரமான நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் கலையரசன். சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் மூலம் பிரபலமான ப்ரியா யூபிடி ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் ‘டிரெண்டிங்’.

Jun 27, 2025 - 12:45
 0  2
காணொளித் தம்பதியின் கதறல்! - இயக்குநரின் குரல்

கோலிவுட்டின் தரமான நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் கலையரசன். சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் மூலம் பிரபலமான ப்ரியா யூபிடி ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் ‘டிரெண்டிங்’. ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை எழுதி, இயக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார் சிவராஜ். அவருடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து…

சிவராஜ்

படத்தின் தலைப்பு இது ‘விளாகர்’களைப் பற்றிய கதை என எண்ணத் தோன்றுகிறது.. அது சரிதான்! தனி ‘விளாகர்’களை (Vlogers) விட, இன்று ‘கப்பிள் விளாகர்’கள் (Couple vloggers) பெருகிவிட்டார்கள். அவர்களே
சட்டென்று பிரபலமாகியும் விடுகிறார்கள். இந்தக் கதையில் அப்படியொரு தம்பதியின் வாழ்க்கையில், ஆன்லைன் ‘கப்பிள் கேம்’ ஒன்று என்ன மாதிரியான சூறாவளியை உருவாக்குகிறது என்பதுதான் கதை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow