காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் - தொடங்கியது வைகாசி பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

May 11, 2025 - 13:00
 0  4
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் - தொடங்கியது வைகாசி பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம், இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் நகரப்பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் உலக பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே அர்ச்சகர்கள் மூலம் கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow