காசி - ராமேசுவரம் கோயில் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

உத்தர பிரதேச மாநிலத்​தில் உள்ள காசி விஸ்​வ​நாதர் கோயில், தமிழகத்​தில் உள்ள ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயில் தீர்த்​தங்​களைப் பரி​மாறிக் கொள்​வதற்​கான ஆன்மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டது.

Aug 2, 2025 - 07:10
 0  4
காசி - ராமேசுவரம் கோயில் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்​தில் உள்ள காசி விஸ்​வ​நாதர் கோயில், தமிழகத்​தில் உள்ள ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயில் தீர்த்​தங்​களைப் பரி​மாறிக் கொள்​வதற்​கான ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டது.

சாஸ்​திர மரபின்​படி, ராமேசுவரத்​தில் உள்ள ராம​நாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​வதும், காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​வதும் மிக​வும் முக்​கிய​மானவை ஆகும். அதே​போல, ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யின் மணலை​யும், பிர​யாக் சங்கம மணலுடன் கலந்து வழிபடு​வதும் சாஸ்​திரங்​களில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow