காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியான ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவார் என, அவருக்கு சந்​நி​யாஸ்ரம தீட்சை வழங்கிய சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது ஆசி உரையில் குறிப்பிட்டார்.

Apr 30, 2025 - 16:10
 0  3
காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியான ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவார் என, அவருக்கு சந்​நி​யாஸ்ரம தீட்சை வழங்கிய சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது ஆசி உரையில் குறிப்பிட்டார்.

கடந்த 25-ம் தேதி காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தின் 70-வது பீடா​திபதி ஜகத்​குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், புனித அட்சய திரு​தியை தினத்​தில் (ஏப்​.30-ம் தேதி, புதன்​கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திரா​விட்​டுக்​கு, காஞ்சி காமாட்சி அம்​மன் கோயி​லில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்​தத்​தில் காலை 6 மணி முதல் 9 மணிக்​குள் சந்​நி​யாஸ்ரம தீட்சை அருள உள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திராவிட்​டுக்​கு, சந்​நி​யாஸ்ரம தீட்சை வழங்கும் வைபவம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் இன்று காலை நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow