காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம்: ஏப். 30-ம் தேதி சந்நியாஸ்ரம தீட்சை பெறுகிறார்
காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ரிக் வேதவிற்பன்னர் ஸ்ரீ கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை / காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ரிக் வேதவிற்பன்னர் ஸ்ரீ கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அட்சய திருதியை தினத்தில்(ஏப்.30-ம் தேதி), அவர் சந்நியாஸ்ரம தீட்சை பெற உள்ளார் என்று காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீ கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காஞ்சி சங்கர மடம் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனித அட்சய திருதியை தினத்தில் (ஏப்.30-ம் தேதி, புதன்கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் காலை 6 மணி முதல் 9 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை அருள உள்ளார்.
What's Your Reaction?