காசா போர் நிறுத்த ஒப்பந்தம் முதல் ட்ரம்ப் பதவியேற்பு வரை: சேதி தெரியுமா? @ ஜன. 8-20
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இரு தரப்புக்கும் ஓராண்டுக்கும் மேலாகப் போர் நீடித்தது. இப்போரில் பாலஸ்தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர்.

ஜன.9: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி. நாராயணன் நியமிக்கப்பட்டார்.
ஜன.9: பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் (80) உடல்நலக் குறைவால் திருச்சூரில் காலமானார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.
What's Your Reaction?