உயிரணுக்களின் பந்தயம்: வெல்லப் போவது யார்?
மனித இனம் தோன்றிய நாளிலிருந்தே பந்தயங்களும் தோன்றிவிட்டன. உடல் வலிமை, மன வலிமை, மகிழ்ச்சி ஆகியவற்றைத் தாண்டி, சுயமுன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்குமான முக்கிய முனைப்பாகப் பந்தயங்கள் உள்ளன.

மனித இனம் தோன்றிய நாளிலிருந்தே பந்தயங்களும் தோன்றிவிட்டன. உடல் வலிமை, மன வலிமை, மகிழ்ச்சி ஆகியவற்றைத் தாண்டி, சுயமுன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்குமான முக்கிய முனைப்பாகப் பந்தயங்கள் உள்ளன. பொதுவாக, பந்தயத்தின் நுணுக்கங்களை எல்லாம் கற்றுத் தெளிந்து, பந்தயப்பொருளை எப்போதும் தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கும் மனிதனுக்கு இந்தப் புதுமுகம் மிகப்பெரிய சவாலை அளிக்க உள்ளது.
அவனால் கட்டுப் படுத்தவோ, பயிற்றுவிக்கவோ முடியாத, ஆனால் அவனுள்ளேயே உற்பத்தியாகி உறைந்திருக்கும் அவனது உயிரணுக்களான விந்தணுக்கள்தான் இப்போதைய பந்தயப் புதுமுகம். ‘Sperm Racing’ எனப்படும் விந்தணுக்களின் பந்தயம், உலகிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் பலேடியம் அரங்கில் UCLA, USC எனும் இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட 5,000 பார்வை யாளர்களுடன் கடந்த ஏப்ரல் 25 அன்று அரங்கேறியது.
What's Your Reaction?