‘நாஜி சல்யூட்’ செய்தாரா எலான் மஸ்க்? - ட்ரம்ப் பதவியேற்பு கொண்டாட்ட நிகழ்வு சர்ச்சை

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைக் கொண்டாடும் நிகழ்வில், நாஜி பாணி சல்யூட் போல ஒரு கை செய்கை செய்ததாக தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.

Jan 21, 2025 - 14:55
 0  4
‘நாஜி சல்யூட்’ செய்தாரா எலான் மஸ்க்? - ட்ரம்ப் பதவியேற்பு கொண்டாட்ட நிகழ்வு சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதைக் கொண்டாடும் நிகழ்வில், நாஜி பாணி சல்யூட் போல ஒரு கை செய்கை செய்ததாக தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்கு பின்பு, ட்ரம்பின் ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றிய எலான் மஸ்க், "நவம்பர் 4-ம் தேதி வெளியான தேர்தல் முடிவு சாதாரண வெற்றி இல்லை. இது மனித நாகரிகப் பாதையில் உள்ள முள்கரண்டி. இது மிகவும் முக்கியமானது, இந்த வெற்றியை சாத்தியமாக்கியதற்கு நன்றி... நன்றி...!" என்று தெரிவித்தார். பின்பு மஸ்க் தனது வலது உள்ளங்கையை இடது மார்பில் வேகமாக அடித்து, பின்பு அனைத்து விரல்களையும் ஒன்றிணைத்து உள்ளங்கை கீழ்நோக்கியபடி கையை மேல் நோக்கி நீட்டினார். பின்பு தன்னை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை நோக்கியும் அதே செய்கையைச் செய்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow