கழுகுமலை கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

கழுகுமலை கழுகாசலமூத்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

Apr 10, 2025 - 13:25
 0  4
கழுகுமலை கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூத்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன்கள் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow