ஒரே நாளில் ரூ.238 கோடி வசூல்: தமிழக பதிவுத் துறையில் சாதனை!

தமிழக அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கி வரும் பதிவுத் துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப் பட்டுள்ளது

Dec 6, 2024 - 21:10
 0  9
ஒரே நாளில் ரூ.238 கோடி வசூல்: தமிழக பதிவுத் துறையில் சாதனை!

சென்னை: தமிழக பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவு டிச.5-ம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தமிழக அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கி வரும் பதிவுத் துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டு நவம்பர் மாத வருவாயுடன் ஒப்பிடும்போது, இந்த நவம்பர் 2024-ம் மாதத்தில் கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow