யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்!

அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தனி யாரை அனுமதிக்கவில்லை.

Aug 17, 2025 - 10:20
 0  4
யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்!

புதுடெல்லி: அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தனி யாரை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அணுசக்தி துறையில் அரசின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இத்துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow