சரிந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.880 குறைந்தது

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.3) சென்னையில் பவுனுக்கு ரூ.880 என குறைந்துள்ளது.

Oct 3, 2025 - 11:05
 0  3
சரிந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.880 குறைந்தது

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.3) சென்னையில் பவுனுக்கு ரூ.880 என குறைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பவுன் தங்கம் விலை ரூ.88,000-ஐ எட்டிய நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow