ஏ.சி., எல்இடி பல்பு தயாரிப்பாளர்களுக்கு பிஎல்ஐ ஊக்கத் தொகை திட்டத்துக்கு விண்ணப்ப பதிவு மீண்டும் தொடக்கம்

ஏ.சி., எல்​இடி பல்பு உள்​ளிட்ட பொருட்​கள் தயாரிப்பாளர்களுக்கு உற்​பத்​தி​யுடன் இணைந்த ஊக்​கத் தொகை திட்டத்துக்​கான விண்​ணப்ப பதிவு மீண்​டும் இன்று தொடங்​கு​கிறது.

Sep 15, 2025 - 10:15
 0  3
ஏ.சி., எல்இடி பல்பு தயாரிப்பாளர்களுக்கு பிஎல்ஐ ஊக்கத் தொகை திட்டத்துக்கு விண்ணப்ப பதிவு மீண்டும் தொடக்கம்

புதுடெல்லி: ஏ.சி., எல்​இடி பல்பு உள்​ளிட்ட பொருட்​கள் தயாரிப்​பாளர்​களுக்கு உற்​பத்​தி​யுடன் இணைந்த ஊக்​கத் தொகை திட்டத்துக்​கான விண்​ணப்ப பதிவு மீண்​டும் இன்று தொடங்​கு​கிறது. ஏ.சி., எல்​இடி பல்பு உள்​ளிட்ட பொருட்​கள் (ஒயிட் பொருட்​கள்) தயாரிப்​பாளர்​களுக்கு உற்​பத்​தி​யுடன் இணைந்த ஊக்​கத் தொகை (பிஎல்ஐ) திட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சரவை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்​ரல் 7-ம் தேதி ஒப்​புதல் வழங்​கியது. ஏப்​ரல் 16-ம் தேதி இதற்​கான முறை​யான அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

உள்​நாட்டு உற்​பத்​தியை ஊக்​குவிக்​க​வும் அதிக அளவில் இத்​துறை​யில் முதலீட்டை ஈர்க்​க​வும் இந்த திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. ரூ.6,238 கோடி​யில் 7 ஆண்​டு​களுக்கு இந்த திட்​டம் அமலில் இருக்​கும் என அறிவிக்​கப்​பட்​டது. இதற்​கான விண்​ணப்​பப் பதிவு 3 சுற்​றுகளாக நடை​பெற்​றது. இது​வரை இந்த திட்​டத்​துக்​காக 83 விண்​ணப்​ப​தா​ரர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow