உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

உடன்​குடி அனல்​மின் நிலை​யத்​தில் சோதனை மின்​னுற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக, மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Sep 16, 2025 - 03:10
 0  3
உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: உடன்​குடி அனல்​மின் நிலை​யத்​தில் சோதனை மின்​னுற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக, மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

துாத்​துக்​குடி மாவட்​டம், உடன்​குடி​யில் தலா, 660 மெகா​வாட் திறனில், இரண்டு அலகு​கள் உடைய அனல்​மின் நிலை​யத்​தை, ரூ.13,076 கோடி​யில் மின்​வாரி​யம் அமைத்து வரு​கிறது. 2012-ம் ஆண்டு திட்​டம் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில். கட்​டு​மான பணி​கள், கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்​பட்டது. உடன்​குடி மின்​நிலை​யத்​துக்கு நிலக்​கரி எடுத்து வரு​வதற்​காக, உடன்​குடி கடற்​கரை​யில் இருந்து கடலில், 5 கி.மீ., துாரத்​துக்கு நிலக்​கரி முனை​யம் அமைக்​கப்​பட்டு உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow