எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடிக்கு 97 தேஜஸ் 1ஏ போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்

இந்​துஸ்​தான் ஏரோ​னாட்​டிக்ஸ் நிறு​வனத்​திட​மிருந்து ரூ.62,000 கோடி மதிப்​பில் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்​திய அரசு இறுதி ஒப்​புதல் அளித்​துள்​ளது.

Aug 21, 2025 - 08:15
 0  4
எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.62,000 கோடிக்கு 97 தேஜஸ் 1ஏ போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்

புதுடெல்லி: இந்​துஸ்​தான் ஏரோ​னாட்​டிக்ஸ் நிறு​வனத்​திட​மிருந்து ரூ.62,000 கோடி மதிப்​பில் 97 தேஜஸ் மார்க் 1ஏ ரக போர் விமானங்களை வாங்க மத்​திய அரசு இறுதி ஒப்​புதல் அளித்​துள்​ளது. விமானப்​படை​யில் உள்ள பழைய மிக் -21 ரக போர் விமானங்​களுக்கு மாற்​றாக உள்​நாட்டு தயாரிப்​பான தேஜஸ் இலகு ரக போர் விமானங்​கள் சேர்க்​கப்​படு​கின்​றன.

விமானப்​படை​யில் ஏற்​கெனவே 40 தேஜஸ் போர் விமானங்​கள் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றன. அதன்​பின்பு ரூ.48,000 கோடி மதிப்​பில் 83 தேஜஸ் மார்க் 1ஏ ரக விமானங்​களை வாங்க மத்​திய அரசு ஆர்​டர் கொடுத்​தது. இந்த விமானங்​களுக்​கான இன்​ஜினை வழங்​கு​வ​தில், அமெரிக்கா தாமதம் செய்​த​தால், இதன் விநி​யோகம் குறித்த நேரத்​தில் நடை​பெற​வில்​லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow