சென்னை: செல்வமகள் திட்டத்தின் கீழ் 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்
2024-25-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னை: 2024-25-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2025 மார்ச் 31-ம் தேதி வரை சென்னை மண்டலத்தில் ரூ.9,234 கோடி வைப்புத் தொகையுடன 10.44 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?