எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கும் மிச்செலின் நிறுவனம்
மிச்செலின் நிறுவனம் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரித்திருக்கிறது. இவை அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மிச்செலின் நிறுவனம் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரித்திருக்கிறது. இவை அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான டயர் விற்பனையில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனமான மிச்செலின் இந்தியா நிறுவனம் தற்போது எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரித்து, அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் விட்டோர் சில்வா, மேலாண்மை இயக்குநர் சாந்தனு தேஷ்பாண்டே,மிச்செலின் சென்னை ஆலை இயக்குநர் புளோரன்ட் சாசேட் ஆகியோர் கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 900 கிமீ விரைவுச் சாலை மட்டுமே இருந்தது. இன்றைக்கு 5 ஆயிரம் கிமீ மேல் விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் விரைவுச் சாலைகள் 16 ஆயிரம் கி.மீட்டரை கடந்திருக்கும். இவை நகரங்களுக்கு இடையேயான தொலைவை குறைக்கின்றன.
What's Your Reaction?