எட்வர்டு ஜென்னர் | விஞ்ஞானிகள் - 16

1796, மே 16 இல் ஜேம்ஸ் ஃபிப்ஸ் என்கிற 8 வயது சிறுவன் மீது சோதனை செய்தார். பண்ணையில் வேலை செய்த ஒரு பெண்ணின் கௌபாக்ஸ் கொப்புளத்திலிருந்து எடுத்த நீர்மத்தை ஜேம்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போல் அந்தச் சிறுவனுக்கு கௌபாக்ஸ் வந்தது. ஒரு வாரத்தில் குணமானார். சில வாரங்கள் கழித்து அதே சிறுவனின் உடலில் பெரியம்மை நீர்மத்தை ஊசி மூலம் செலுத்தினார். உயிரோடு விளையாடுவதாக மற்ற மருத்துவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், அந்தச் சிறுவனுக்குப் பெரியம்மை ஏற்படவில்லை. உலகத்துக்குப் பெரியம்மைக்கான தடுப்பூசி கிடைத்தது. பரவலாக இந்தத் தடுப்பூசியை ஏற்கவில்லை. எத

Jan 15, 2025 - 19:00
 0  6
எட்வர்டு ஜென்னர் | விஞ்ஞானிகள் - 16

நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய்களை வரவிடாமல் தடுப்பதே சிறந்தது. அப்படிப்பட்ட நோய்களில் ஒன்றான பெரியம்மையை ஒழித்தவர் எட்வர்டு ஜென்னர்.

1749, மே 17 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் ஜென்னர். 14 வயதில் டேனியல் லுட்லோ என்கிற அறுவை சிகிச்சை நிபுணரிடம் பயிற்சிக்காகச் சேர்ந்தார். 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அறுவை சிகிச்சை நிபுணராவதற்குத் தேவையான அனுபவத்தைப் பெற்றார். 1770இல் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் சேர்ந்தார். 1792இல் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow