ஊரையே காப்பாற்றிய டோகோ! | வரலாறு முக்கியம் மக்களே! - 17

1924 டிசம்பர். அலாஸ்காவின் நோம் நகரத்தில் டிப்தீரியா என்கிற தொண்டை அழற்சி நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. அன்றைய காலக்கட்டத்தில் அது தீவிரமானால் மரணம் நிச்சயம்.

Sep 24, 2025 - 13:30
 0  3
ஊரையே காப்பாற்றிய டோகோ! | வரலாறு முக்கியம் மக்களே! - 17

1924 டிசம்பர். அலாஸ்காவின் நோம் நகரத்தில் டிப்தீரியா என்கிற தொண்டை அழற்சி நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. அன்றைய காலக்கட்டத்தில் அது தீவிரமானால் மரணம் நிச்சயம். அதற்கு நச்சு எதிர்ப்பு மருந்துதான் (Diphtheria Antitoxin) ஒரே தீர்வு. அது கைவசம் இல்லை. நோய் தீவிரமாகப் பரவினால் நகரத்தின் பாதி மக்கள்தொகையே அழிந்துவிடலாம். நோம் நகரம் பனியால் உறைந்து கிடந்தது. கடல் நீரும் உறைந்துபோக, துறைமுகமும் மூடப்பட்டிருந்தது.

மருந்தை எப்படிக் கொண்டுவருவது என்று டாக்டர் கர்ட்டிஸ் வெல்ச், நகர மேயர், அதிகாரிகள் திட்டம் தீட்டினார்கள். அமெரிக்காவின் வாஷிங்டனில் இருந்து மருந்துகள் அலாஸ்காவின் ஆங்கரேஸுக்கு அனுப்பப் பட்டன. அங்கிருந்து அவை நெனானாவுக்கு ரயில் மூலம் வந்துகொண்டிருந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow