உத்தராகண்ட்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியது - கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வழிபாடு
உத்தராகண்ட்டில் சார்தாம் யாத்திரை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்ட நிலையில், யமுனோத்ரி கோயில் திறப்பில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார்.

டேராடூன்: உத்தராகண்ட்டில் சார்தாம் யாத்திரை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்ட நிலையில், யமுனோத்ரி கோயில் திறப்பில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த 4 கோயில்களுக்கும் சென்று தரிசனம் மேற்கொள்ளும் யாத்திரை 'சார்தாம் யாத்திரை' என அழைக்கப்படுகிறது. கேதார்நாத் சிவபெருமானின் தாயகமாகவும், பத்ரிநாத் விஷ்ணுவின் தாயகமாகவும் கருதப்படுகிறது. இதேபோல், கங்கோத்ரி, கங்கை அன்னைக்கான சக்தி தலமாகவும், யமுனோத்ரி, யமுனை அன்னையின் சக்தி தலமாகவும் விளங்குகிறது.
What's Your Reaction?