உணவு சுற்றுலா: வெல்லிங்டன் பரோட்டா

1980களில் இந்த உணவகத்தில் வெல்லிங்டன் பரோட்டா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. சுவையிலும் வடிவமைப்பிலும் வெல்லிங்டன் பரோட்டா வித்தியாசத்தைக் கொடுக்க, மற்ற பகுதிகளுக்கும் விரைவில் பரவி இருக்கிறது.

Sep 10, 2025 - 15:55
 0  19
உணவு சுற்றுலா: வெல்லிங்டன் பரோட்டா

நீலகிரி மாவட்டத்தின் குன்னூரிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது வெல்லிங்கடன் பகுதி. ராணுவக் கல்லூரியும் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டும் வெல்லிங்டனில் புகழ்பெற்றவை. குன்னூரின் சிம்ஸ் பூங்கா, டால்பின் முனை ஆகியவற்றைப் பார்வையிடுபவர்கள் வெல்லிங்டன் ராணுவ சாலையில் பயணிப்பதையும் தவறவிட மாட்டார்கள். ராணுவத்துக்குப் பெயர் பெற்ற குன்னூரில் பிரபலமான மிலிட்டரி உணவகம் ஒன்று அமர்க்களப்படுத்துகிறது.

ராமச்சந்திரா உணவகம்:
சுமார் 68 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது பழமையான ராமச்சந்திரா உணவகம். விவரம் தெரிந்த சுற்றுலாப் பயணிகள் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் தவிர்க்க முடியாத உணவகம் இதுதான். 1957இல் தொடங்கப்பட்ட ராமச்சந்திரா உணவகத்தின் ஸ்பெஷல் வெல்லிங்டன் பரோட்டா!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow