சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளது.

Sep 10, 2025 - 16:55
 0  4
சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

காத்மாண்டு: காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளது. மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.

நேபாளத்தில் வெடித்த பயங்கர கலவரத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையத்தின் விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow