சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

சீன ராணுவ அணிவகுப்​பில் ரஷ்​யா, வட கொரி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்​சனம் செய்​துள்​ளார்.

Sep 4, 2025 - 10:25
 0  3
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்

வாஷிங்டன்: சீன ராணுவ அணிவகுப்​பில் ரஷ்​யா, வட கொரி​யத் தலை​வர்​கள் பங்​கேற்​றது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்​சனம் செய்​துள்​ளார்.

இரண்​டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்​டு​களைக் குறிக்​கும் வகை​யில், சீனா​வில் நேற்று விழா நடத்​தப்​பட்​டது. சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற ராணுவ அணிவகுப்பு விழா​வில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்பட சீனா​வின் 26 நட்பு நாடு​களைச் சேர்ந்த தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow