மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

இந்​தி​யப் பெண்​கள் சேமிப்பு என்ற மனநிலை​யி​லிருந்து தற்​போது முதலீடு என்ற பார்​வைக்கு மாறி​யுள்​ளனர்.

Sep 4, 2025 - 10:35
 0  3
மூன்று ஆண்டுகளில் பெண் முதலீட்டாளர்கள் 50% உயர்வு

புதுடெல்லி: இந்​தி​யப் பெண்​கள் சேமிப்பு என்ற மனநிலை​யி​லிருந்து தற்​போது முதலீடு என்ற பார்​வைக்கு மாறி​யுள்​ளனர். தங்​கள் பணத்தை தெளி​வான இலக்​கு​களு​டன் அவர்​கள் முதலீடு செய்ய தொடங்​கி​யுள்​ளனர். நாட்​டின் நிதி சூழலை மாற்​றியமைப்​ப​தில் பெண் முதலீட்​டாளர்​கள் முக்​கிய பங்கு வகிக்​கின்​றனர்.

இதுதொடர்​பாக டிஜிட்​டல் வெல்த் மேனேஜ்மென்ட் முதலீட்டு தளமான பின்​எட்ஜ் மேற்​கொண்ட ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 2012-ல் புதிய முதலீட்​டாளர்​களில் பெண்​களின் பங்கு 18%-​மாக மட்​டுமே இருந்​தது. இன்று 42% அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, கடந்த மூன்று ஆண்​டு​களில் மட்​டும் முதலீட்டு நடவடிக்​கை​களில் பெண்​களின் பங்​கேற்பு 50% அதி​கரித்​துள்​ளது. மேலும், 2028-ம் ஆண்​டுக்​குள் அனைத்து புதிய முதலீட்​டாளர்​களி​லும் பாதிக்​கும் மேற்​பட்​ட​வர்​கள் பெண்​களாக இருப்​பார்​கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow