‘தேர்தல் முடிவால் அமெரிக்காவின் போக்கில் மாற்றம் இருக்காது’ - ஜெய்சங்கர்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் அதன் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Nov 11, 2024 - 15:45
 0  3
‘தேர்தல் முடிவால் அமெரிக்காவின் போக்கில் மாற்றம் இருக்காது’ - ஜெய்சங்கர்

கான்பெரா: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவால் அதன் கொள்கை ரீதியிலான போக்கில் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், "அமெரிக்க கொள்கையின் நீண்டகால போக்கு என்று நான் கூறிவரும் விஷயத்தை அங்கு நடைபெற்றுவரும் தேர்தல் மாற்றியமைக்கும் என்று நான் நம்பவில்லை. அநேகமாக, முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவில் இருந்து தொடங்கி அமெரிக்கா அதன் சர்வதேச கடமைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளது. உதாரணமாக அமெரிக்கா தனது துருப்புக்களை (ராணுவம்) நிலைநிறுத்துவதில் தயக்கம் காட்டுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow