ஈஷாவில் திருமூலர் கூறிய 4 நெறிகளும் பின்பற்றப்படுவதாக தருமபுரம் ஆதீனம் பாராட்டு

“ஈஷாவில் திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் கடைப்பிடிக்கப்படுகிறது” என தருமபுரம் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார்.

Dec 11, 2024 - 21:10
 0  4
ஈஷாவில் திருமூலர் கூறிய 4 நெறிகளும் பின்பற்றப்படுவதாக தருமபுரம் ஆதீனம் பாராட்டு

கோவை: “ஈஷாவில் திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் கடைப்பிடிக்கப்படுகிறது” என தருமபுரம் ஆதீனம் பாராட்டு தெரிவித்தார். தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது குருமகாசந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோக மையத்துக்கு இன்று (டிச.11) வந்தார். ஈஷா வளாகத்தில் உள்ள தியானலிங்கம் முன்பாக ஈஷா பிரம்மச்சாரிகளும், தன்னார்வலர்களும் ஆதீனத்தை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

பின்னர், அவர் தியானலிங்கத்தில் நடைபெற்ற நாத ஆராதனையில் பங்கேற்றார். சூர்ய குண்டம், நாகா சந்நிதி, லிங்கபைரவி சந்நிதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார். ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியையும், கோசாலையும் அவர் பார்வையிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow