“ஈரான் அணுசக்தி திட்டம் நாசமானது” - ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ குறித்து அமெரிக்க அமைச்சர் பெருமிதம்
ஆபரேஷன் மிட்நைட் ஷேமர் மூலம் ஈரான் அணு சக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் நேற்று கூறினார்.

வாஷிங்டன்: ஆபரேஷன் மிட்நைட் ஷேமர் மூலம் ஈரான் அணு சக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் நேற்று கூறினார்.
ஈரான் மீது அமெரிக்க நேற்று அதிகாலை நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஷெக்சேத் பென்டகனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் அணு சக்தி திட்டம் நாசமானது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என பெயரிடப்பட்டது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.
What's Your Reaction?