72 பயணிகளுடன் சென்ற விமானம் கஜகஸ்தானில் தரை இறங்கியபோது விபத்து

கஜகஸ்தானின் அக்டாவ் விமானநிலைத்தில் 72 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்க முயன்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது என்று  அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் 12 பேர் உயிர் பிழைத்திருப்பதாகவும் கூறினர்.

Dec 25, 2024 - 16:30
 0  3
72 பயணிகளுடன் சென்ற விமானம் கஜகஸ்தானில் தரை இறங்கியபோது விபத்து

அக்டாவ்: கஜகஸ்தானின் அக்டாவ் விமானநிலைத்தில் 72 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்க முயன்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் 12 பேர் உயிர் பிழைத்திருப்பதாகவும் கூறினர்.

ரஷ்ய செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம் ஜெ2-8243 பாகுவில் இருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. அந்த விமானம் கஜகஸ்தானின் அகடாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow