ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன: ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவ் தகவல்

ஈரானை தாக்கியதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய போரை தொடங்கி வைத்துள்ளார். அமைதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது வருந்தத்தக்கது.

Jun 23, 2025 - 08:20
 0  3
ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன: ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவ் தகவல்

ஈரானிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து ஈரானுக்கு தேவையான அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவருமான திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறி்தது அவர் மேலும் கூறியதாவது: ஈரானை தாக்கியதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய போரை தொடங்கி வைத்துள்ளார். அமைதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது வருந்தத்தக்கது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எந்தவொரு ராணுவ நோக்கங்களையும் அடைய தவறிவிட்டது. ஈரான் சிறிய சேதத்தை மட்டுமே சந்தித்துள்ளது. அது எதிர்காலத்தில் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட இந்த தாக்குதல் வழிவகுக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow