‘ஈ’க்களின் தொல்லையால் கிராமத்தை காலி செய்யும் மக்கள் - திருச்செங்கோடு அருகே தீராத பிரச்சினை
திருச்செங்கோடு அருகே கட்டிபாளையம் கிராமத்தில் தொடரும் ஈக்கள் பிரச்சினையால் அங்குள்ள மக்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வேறு இடத்துக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளதாக புகார் எழுந்துள்ளது

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கட்டிபாளையம் கிராமத்தில் தொடரும் ஈக்கள் பிரச்சினையால் அங்குள்ள மக்கள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு வேறு இடத்துக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருச்செங்கோடு அருகே மரப்பரை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டிபாளையம் கிராமத்தைச் சுற்றி 20-க்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் உள்ள கூடாரத்தின் கீழ் கோழிகளின் எச்சம் மலை போல் குவித்து வைக்கப்படும். அவற்றை குறிப்பிட்ட மாதத்திற்கு ஒரு முறை கோழிப் பண்ணையாளர்கள் விற்பனை செய்வர்.
What's Your Reaction?