இந்தியா, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த சாதனைப் பெண்கள் | முகங்கள் 2024
ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

ஆணின் கைகள் ஓங்கி, பெண்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் ‘கடமை’யாக்கப்பட்டுவிட்ட பிறகு ஒவ்வொரு துறையிலும் பெண்கள் போராடித்தான் தடம் பதிக்கிறார்கள். தங்கள் வெற்றியின் மூலம் அடுத்த தலைமுறைக்குப் பாதை அமைத்துத் தருகிறார்கள். 2024இல் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்த சாதனைப் பெண்களில் சிலர் இவர்கள்:
தளராத தன்னம்பிக்கை: ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஆனால், இறுதிப் போட்டியின்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.
What's Your Reaction?