இந்திய விண்வெளி வீரர்கள் | ஆக.23 - தேசிய விண்வெளி நாள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமே ‘ககன்யான்’. 2024ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்ல இருக்கும் விண்வெளி வீரர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமே ‘ககன்யான்’. 2024ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்ல இருக்கும் விண்வெளி வீரர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், ஷுபன்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் பூமியிலிருந்து 400 கி.மீ. சுற்றுப்பாதையில் 3 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
பிரசாந்த் பாலகிருஷ்ணன்: 1976ஆம் ஆண்டு கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாராவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்தைக் குவைத்தில் கழித்தார். பள்ளிப் படிப்பைப் பாலக்காட்டில் முடித்தார். என்.எஸ். எஸ். பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
What's Your Reaction?