‘DeepSeek’ AI - உலக அளவில் கவனம் ஈர்க்கும் சீன தேச ஏஐ அசிஸ்டன்ட்
உலக அளவில் புது பாய்ச்சலோடு பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது சீன தேச ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக்கின் ஏஐ அசிஸ்டன்ட். இப்போதைக்கு ஏஐ உலகில் அதிகம் பேசப்படும் ஏஐ அசிஸ்டன்ட்டாக இது உள்ளது.

சென்னை: உலக அளவில் புது பாய்ச்சலோடு பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது சீன தேச ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக்கின் ஏஐ அசிஸ்டன்ட். இப்போதைக்கு ஏஐ உலகில் அதிகம் பேசப்படும் ஏஐ அசிஸ்டன்ட்டாக இது உள்ளது.
கடந்த 2023-ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் இதன் தாய் நிறுவனமாகும். சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங் தான் இதன் நிறுவனர். இந்த சூழலில் ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக்.
What's Your Reaction?