ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா கூறியது: “ஆர்.எஸ்.மங்கலம் (ராஜசிங்கமங்கலம்) அருகில் உள்ள காவனூரில் மதுரை வீரன் சாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள கல்வெட்டை வாசித்ததில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி காலத்திய அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு என்பது தெரிய வந்தது.
What's Your Reaction?